கோவை: கொளுத்தும் வெயிலைத் தணிக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் கோடை மழை பெய்தது. கடும் வெப்பத்தில் தகித்த மக்கள் குளிர்ச்சியின் மகிழ்ச்சியில் திளைத்தனர். கோடை மழை 104 மி.மீ. பெய்ததாகக் காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்தது.
கோவை: கொளுத்தும் வெயிலைத் தணிக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் கோடை மழை பெய்தது. கடும் வெப்பத்தில் தகித்த மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். கோடை மழை 104 மி.மீ. பெய்ததாகக் காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்தது.
கோவை மாவட்டத்தில் கோடை மழை 104 மி.மீ. பெய்து உள்ளது. இது, கடந்த ஆண்டை விடக் குறைவு என்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையத் தலைவர் ராமநாதன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் ராமநாதன், ‘‘மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் பெய்யும் மழை, கோடை மழையாகக் கணக்கிடப்படுகிறது. நடப்பாண்டில் மார்ச் மாதத்தில் கோவையில் மழை எதுவும் பெய்யவில்லை. ஆனால், ஏப்ரல் மாதத்தில் 34 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்து உள்ளது.
இதேபோல், நடப்பு மே மாதத்தில் இதுவரை 70 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கோவையில் கோடை மழை மொத்தம் 104 மி.மீ. பெய்து உள்ளது. இந்த மழையானது 9 நாட்களில் பெய்து உள்ளது. கடந்த ஆண்டு கோவையில் கோடை மழை 170 மி.மீ. பெய்து உள்ளது. எனவே, கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 64 மி.மீ. குறைவாகக் கோடை மழை பெய்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் விரைவில் தொடங்க உள்ளதாக இந்திய வானவியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கோவையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையானது 200 மி.மீ. அளவிற்கு பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரியில் 860 மி.மீ. அளவுக்கு இந்தப் பருவமழை பெய்யும்'' என்று கூறினார்.