கோவை: கோவையில் பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘ஓட்டுப் போட்ட மக்களுக்கு மட்டுமல்ல ஓட்டுப் போடாத மக்களுக்கும் சேர்த்தே வேலை பார்க்கின்றோம். ஓட்டுப் போடாத மக்கள் வருத்தப்படும் வகையில் எங்கள் பணி இருக்கும்'' என தெரிவித்தார்.
கோவை: கோவையில் பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘ஓட்டுப் போட்ட மக்களுக்கு மட்டுமல்ல ஓட்டுப் போடாத மக்களுக்கும் சேர்த்தே வேலை பார்க்கின்றோம். ஓட்டுப் போடாத மக்கள் வருத்தப்படும் வகையில் எங்கள் பணி இருக்கும்'' என தெரிவித்தார்.
கொரோனா தொற்று அதிகம் பாதிக்கபட்டுள்ள ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வை முடித்துக்கொண்டு கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர 50 கார் ஆம்புலனஸ் வாகனங்களைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர் மு.கஸ்டாலின், PPE கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சைப் பிரிவுகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மாலை 5 மணி மணி அளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 5 மாவட்ட ஆட்சியாளர்களுடன் கொரோனா நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது,
‘‘தமிழகத்தைப் பாதுகாப்பதுதான் எங்கள் முதல் வேலை அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேகதாது அணைகட்ட எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்கமாட்டோம். இதற்கென கிராமப்புற கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கொடிசியா, வேளாண் பல்கலை, பாரதியார் பல்கலைக் கழகம் உட்பட பல்வேறு இடங்களில் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தபட்டுள்ளது. சீனிவாசா கல்யாண மண்டபம், கொடிசியாவில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் தேதி முதல் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதுவரை கோவையில் 5,85,713 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதிய அரசு அமைந்த பின் 1,51,061 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கோவை உட்பட எல்லா இடங்களில் படுக்கை பற்றாகுறை இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கோவை புறக்கணிகப்பட்டதாக சிலர் சொல்கின்றனர். அவர்களுக்கு அரசியல் ரீதியாக பதில் அளிக்க விரும்பவில்லை. அவர்கள் இந்த அரசு ஏற்படுத்தியுள்ள உட்கட்ட அமைப்புகளைப் பார்வையிட வேண்டும். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
எல்லா ஊரும் எங்க ஊர்தான். எந்த பாரபட்சமும் கிடையாது. கோவை புறக்கணிக்கப்படவில்லை. ஓட்டுபோட்ட மக்களுக்கு மட்டுமல்ல ஓட்டுப்போடாத மக்களுக்கும் சேர்த்தே வேலை பார்க்கின்றோம். ஓட்டுப்போடாத மக்கள் வருத்தப்படும் வகையில் எங்கள் பணி இருக்கும். தமிழகத்தை பாதுகாப்பதுதான் எங்கள் முதல் வேலை. அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேகதாது அணைகட்ட எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்கமாட்டோம்'' என்று கூறினார்.
மேலும், இந்தக் கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர், சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன், உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நான்கு மாவட்ட ஆட்சியர்கள், சுகாதார அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.