பொள்ளாச்சி: தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்தநிலையில் பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், பொள்ளாச்சி - கோவை ரோடு நஞ்சேகவுண்டன்புதூர் அருகே மதுபாட்டில் பதுக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற வடக்கிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீஸார், மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்துவந்த டாஸ்மாக் கடை விற்பனையாளர் காளிமுத்து(46), என்பவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து சுமார் 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 359 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.