திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து ஆய்வு..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய நூறு படுக்கை வசதி கொண்ட கொரோனா கூடுதல் சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய நூறு படுக்கை வசதி கொண்ட கொரோனா கூடுதல் சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தன்னார்வலர்கள் உதவியுடன் 24 மணிநேரமும் ஆக்ஸிஜன் வசதியுடன் செயல்படக்கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா கூடுதல் சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பயன்பாட்டிற்காகக் கொண்டு வந்தார்.

சிகிச்சை மையத்தை திறந்து வைத்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்ல வசதியாக கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார்.



மேலும், திருப்பூர் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில் தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கினார். இந்நிகழ்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...