கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கோடு, கோவையில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறிவது குறித்து, அப்பணியாளர்களுக்கு ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.94 மற்றும் 100வது வார்டு பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் வீடூ வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் கண்டறியும் முறைகள், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவினைக் கண்டறியும் முறைகள், தெர்மா மீட்டர் மூலம் வெப்ப அளவினைக் கண்டறியப்படும் முறைகள் குறித்து சுகாதாரப் பணியாளார்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அறிவுரை வழங்கினார். உடன் தெற்கு மண்டல உதவி செயற்பொறியாளர் சுந்தராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.