கோவை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு நீடிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவல் அதிகமாக உள்ள நகரங்களில் தமிழகத்தில், கோவை முதலிடம் வகுத்து வருவதால், நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்திற்கு இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொள்ள இன்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை கொரோனா வார்டில் பாதுகாப்பு கவசம் அணிந்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை, வசதிகள் மற்றும் உணவு குறித்து கேட்டறிந்தார்.
அங்கு, தேவைப்படும் வசதிகள் குறித்தும் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டு அறிந்தார்.

அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்திற்கென 50 கொரோனா சிறப்பு அவரச ஊர்தியை (Covid Special Ambulance) வசதியை திறந்து வைத்தார்.

வைரஸ் தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டுமானால் கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் அவர்களை அழைத்து வருவதற்கு இந்த ஆம்புலன்ஸ் சேவை உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.