பொள்ளாச்சி: கொரோனா தடுப்பூசி செலுத்த முறையாக திட்டமிட்டு பொதுமக்களை முகாமிற்கு அழைக்க வேண்டும். கூட்டம் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள நாச்சிமுத்து பிரசவ விடுதியில் நேற்றுதடுப்பூசி செலுத்தப்படும் என்று நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இதனையடுத்து இன்று காலை 7 மணி முதல் ஆயிரக்கணக்கான மக்கள் தடுப்பூசி மையத்தில் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தடுப்பூசி செலுத்தும் மையத்தை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் தடுப்பூசி செலுத்த பல மணி நேரம் காத்திருப்பதாகப் புகார் தெரிவித்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டியின்போது, பொள்ளாச்சி மக்கள் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு விழிப்புடன் உள்ளார்கள். அதிகாரிகள் திட்டமிட்டு நகரப்பகுதி என்றால், வார்டு வாரியாக எத்தனை தடுப்பூசி வருகிறது என்பதை கணக்கில் கொண்டு பொதுமக்களை வரவழைக்க வேண்டும்.
தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமானால் அந்தந்தப் பகுதியிலேயே போட நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மக்களை வரவழைத்தால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.