கோவை: கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக வேலை நேரத்தைக் குறைக்கவும் முகக்கவசம், கிருமி நாசனி வழங்கவும் ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட அதிபர்களுக்காக ஆனைமலை தேயிலை தோட்ட அதிபர்கள் சங்கம் இயங்கி வருகிறது. ஆனைமலை தோட்ட அதிபர்கள் சங்கத் தலைவரும் டாடா காபி குரூப் மேலாளருமான ஒலிவரிடம் வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவிக் கொண்டிருக்கக்கூடிய இந்த சூழலின் காரணமாக, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நலன் கருதி, இந்தக் கொரோனோ காலகட்டத்தில் மட்டும் வேலை நேரத்தை 3மணி வரை குறைத்தும் வேலை நேரத்தில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி மற்றும் கை உறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட கோரியும் ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் LPF பொதுச்செயலாளர் V.B.வினோத்குமார் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.