கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாயாக கபசுர குடிநீர், மாஸ்க் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமைத் தடுத்து தி.மு.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தநிலையில், கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் கடந்த சில தினங்களாக அனைத்து தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதுடன் மக்களுக்கு கபசுர குடிநீர், மாஸ்க், பிஸ்கட், குடிநீர் போன்றவைகளை வழங்கி வருகிறார்.

இன்று சிங்காநல்லூர் பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் 45 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு சென்ற சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மற்றும் அதிமுகவினர் தடுப்பூசி போட வரும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மாஸ்க் மற்றும் பிஸ்கட் வழங்கி வந்தனர்.

அங்கு வந்த தி.மு.கவினர் சிலர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமிடம் வாக்குவாத்ததில் ஈடுபட்டதுடன் மக்களுக்கு எந்த நலத்திட்டங்களும் வழங்கக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, மக்களுக்கு தி.மு.கவினர்தான் எந்த நலத்திட்டங்களும் செய்து கொடுக்கவில்லை, ஆனால், நாங்கள் கொடுக்கும் நலத்திட்டங்களில் கட்சி ஸ்டிக்கரோ, அல்லது கட்சி கொடியோ ஏதும் இல்லாமல் வழங்கி வருகிறோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிமுக எம்எல்ஏ ஜெயராம் கூறினார். ஆனால், சட்டமன்ற உறுப்பினர் கூறுவதை கேட்காத திமுகவினர் தொடர்ந்து கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் இரு தரப்பினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் ஆரம்ப சுகாதார மையத்தின் வெளியே வரிசையில் தடுப்பூசி போட காத்திருந்த மக்களுக்கு கபசுர குடிநீர், மாஸ்க் மற்றும் பிஸ்கட்களை வழங்கினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.