கோவை: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோவை பீளமேடு பகுதியில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த கொண்டிருந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு பகுதியில் மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 101 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் மது கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடுவது தெரிந்து, அவர்களுக்கு விற்பதற்காக ஒரு சிலர் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் செல்லும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
நேற்று கோவையில் இருவேறு இடங்களில் டாஸ்மாக் கடையை உடைத்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீஸார் டாஸ்மார்க் இருக்கும் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவோரை போலீஸார் பிடித்து வருகின்றனர். இந்தநிலையில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் கோவையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பீளமேடு பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திக் வயது 25, என்பவரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 101மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.