மேட்டுப்பாளையம் அருகே அரசு மதுபானக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு..!

கோவை: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள காக்காபாளையம் அரசு மதுபானக் கடையில் பூட்டப்பட்டிருந்த கதவின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் மதுபாட்டில்களைத் திருடிச் சென்றுள்ளனர்.


கோவை: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள காக்காபாளையம் அரசு மதுபானக் கடையில் பூட்டப்பட்டிருந்த கதவின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் மதுபாட்டில்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் உட்கோட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காக்காபாளையம் அரசு மதுபானக் கடையில் கடந்த 26/05/2021 இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடையின் கதவை உடைத்து சுமார் 91 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது சம்பந்தமாக மதுபானக் கடை மேலாளர், தவமணி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், இ.கா.ப., உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் மேற்பார்வையில், அன்னூர் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில், உதவி ஆய்வாளர் சிலம்பரசன், காவலர் குருசாமி மற்றும் சைபர் கிரைம் தலைமை காவலர் மகேஷ்குமார் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தொடங்கியது.

தேடுதலைத் தொடர்ந்து, பச்சாபாளையம் மதுபானக் கடை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்ய முன்னுக்குப்பின் முரணாகப் பேசியநபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் தற்போது சூலூர், செங்கந்துறையில் வசிக்கும் மதுரையைச் சேர்ந்த சங்கிலி சின்னதம்பி என்பவரின் மகன் சக்திவேல் என்றும் அவருடன் சேர்ந்து மூன்று நபர்கள் கடந்த 26/05/2021 அன்று காக்காபாளையம் அரசு மதுபான கடையில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, சக்திவேலை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள மூன்று நபர்களைப் பிடிக்க தனிப்படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...