'கோவைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறேன்... கழக நிர்வாகிகள் என்னை நேரில் சந்திக்க ஆர்வம் காட்ட வேண்டாம்..!' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கோவை: ‘‘நாளை மே 30 கோவைக்கு நேரடிப் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இது முழுக்க முழுக்க அரசு முறை பயணம். அவசரகாலத் தேவையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற பயணம் என்பதால், கழக நிர்வாகிகள் யாரும் என்னை நேரில் சந்திப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம்'' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: ‘‘நாளை மே 30 கோவைக்கு நேரடிப் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இது முழுக்க முழுக்க அரசு முறை பயணம். அவசரகாலத் தேவையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற பயணம் என்பதால், கழக நிர்வாகிகள் யாரும் என்னை நேரில் சந்திப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம்'' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தை கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து மீட்பதற்காக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவார கால ஊரடங்கினால் நோய்த்தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருவதைக் காண்கிறோம். இது மேலும் குறைந்து நோய்த்தொற்று வரைபடம் தட்டையான நிலையைத் தொடவேண்டும் என்பதற்காகத்தான் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு இன்றி நோய்த்தொற்று சங்கிலியை துண்டிக்க முடியாது. எனவே, ஊரடங்கில் மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

மேலும், மளிகை, காய்கறி, பழங்கள் ஆகியவை வீட்டருகே விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளையும் மேம்படுத்தப்பட்டு, பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வருவதற்கு அவசியமற்ற நிலையை உருவாக்குவதில் அரசு முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அதனை விரைவுபடுத்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்து நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கொண்டுவரவும் நாளை மே 30 கோவைக்கு நேரடி பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இது முழுக்க முழுக்க அரசு முறை பயணமாக, அவசரகாலத் தேவையைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற பயணம் என்பதால், நம்முடைய கழக நிர்வாகிகள் யாரும் என்னை நேரில் சந்திப்பதற்கும், வரவேற்பதற்கும் ஆர்வம் காட்ட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கட்டுப்பாடுகளுக்கான பணிகளை கவனிக்க நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள் தவிர, மற்றவர்கள் யாரும் வரவேண்டாம் வரவேற்பு ஏற்பாடுகளையும் முற்றிலுமாக தவிர்த்திட வேண்டுமாய் கூறுகிறேன். தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவதே எனக்கு வழங்கப்படும் சிறப்பான வரவேற்பு என கருதுகிறேன்'' என்று கூறியுள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...