கோவை: கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களின் இரு சக்கர வாகனங்களோடு ஆட்டோக்களும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் ஊரடங்கை மீறியதாக ஆட்டோ உட்பட 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாநகர் வடவள்ளி போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சில அத்தியாவசியத் தேவைகள் மற்றும் மருத்துவம் போன்றவற்றிற்கு மட்டும் வெளியில் வருபவர்களை விடுத்து, தேவையற்ற முறையில் வாகனங்களில் சுற்றியவர்களைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து வாகனங்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 13 ஆட்டோக்கள், 32 இருசக்கர வாகனங்கள் உட்பட 45 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இரவு நேரங்களில் சுற்றித் திரிபவர்களைப் பிடிக்கவும் திருட்டுச் செயலில் ஈடுபவர்களைப் பிடிக்கவும் கோவை மாவட்ட எஸ்.பி செல்வகனகரத்தினம் உத்தரவின் பேரில் டிஎஸ்பி சீனிவாசலு மேற்பார்வையில் தொண்டாமுத்தூர் சரக காவல் ஆய்வாளர் பொறுப்பு சாஸ்தா தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.