கோவையில் கொரோனா தொற்று அதிகரிக்க அனுமதி அளிக்கப்படாத தொழில் நிறுவனங்களே காரணம்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரிக்க அனுமதி அளிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இயங்கியதுதான் காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரிக்க அனுமதி அளிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இயங்கியதுதான் காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘‘தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு வார காலமாக குறைந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கோவையில் நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்றைவிட இன்று 800 குறைவாக உள்ளது.

அனுமதிக்கப்படாத ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருவதே கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணம். தொழில் நிறுவனங்கள் நாளை முதல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அனுமதி இல்லாமல் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்படும்'' என எச்சரித்த அவர், ‘‘கொரோனா பாதித்த நோயாளிகள் ஆட்டோக்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதால் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ளது போல கார், ஆம்புலன்ஸ் திட்டத்தை கோவையில் செயல்படுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 கார் ஆம்புலன்ஸ்கள் கோவைக்கு வரவழைக்கப்பட உள்ளது. நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பணிபுரியும் நபர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதால், 10 நாட்களுக்கு கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அனைத்தும் வீணடிக்காமல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், மக்கள் தொகை அதிகமுள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு குறைந்த அளவிலான தடுப்பூசிகளை மட்டுமே ஒதுக்கி உள்ளது'' என குற்றம்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்தொற்றுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு, ‘‘மருத்துவமனைகள் சம்பாதிப்பதற்கான நேரம் இதுவல்ல, மனசாட்சியின்படி மருத்துவமனை நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...