பொள்ளாச்சியில் தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் முற்றுகை..!

பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிக அளவில் குவிந்தனர். தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.


பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிக அளவில் குவிந்தனர். தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வேகமெடுத்து வரும் சூழலில் மத்திய - மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அண்மைக்காலமாக கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், அச்சமடைந்த பொதுமக்கள் தற்போது கூட்டம் கூட்டமாக தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளச் செல்கின்றனர்.



இன்று பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளைப் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக தடுப்பூசி மையத்தை வந்தடைந்தனர். சுமார் 1000 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்ட நிலையில், மீதம் உள்ளவர்களை திருப்பி அனுப்பியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதுகுறித்து கூறிய பொதுமக்கள், ‘‘அதிகாரிகள் தடுப்பூசி குறித்த முறையான அறிவிப்பை வெளியிடாதுதான் இந்தக் கூட்டத்திற்கு காரணம் தடுப்பூசி வருகைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அப்பகுதி மக்களுக்கு போட்டால்தான் இப்படிபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்'' என்று தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...