திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது, தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என நேரடியாக கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து, பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 18 முதல் 44 வயது உட்பட்டோருக்குச் செலுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்புலன்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் முன்களப் பணியாளர்கள் என 10,000 பேர் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் நாளை 25 கார் ஆம்புலன்ஸ் தமிழக முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது
அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.