கோவை: கோவை சின்னவேடம்பட்டியில் சி.ஆர்.ஐ. அறக்கட்டளை சார்பில் கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு மருத்துவமனையை தமிழக உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அப்போது, கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் சி.ஆர்.ஐ. அறக்கட்டளையின் அறங்காவலர் சௌந்தரராஜன் கூறுகையில், "சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் சார்பில் கோவை சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ள 30,000 சதுர அடியில் உள்ள அலுவலக கட்டிடம் மருத்துவமனையாக முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கு சிறந்த காற்றோட்ட வசதி, தனிமையான சூழல், தொலை காட்சி பெட்டி, வை-பை வசதி, தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதி, தகுதி வாய்ந்த மருத்துவர்கள் செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை கொண்டு தரமான முறையில் சலுகை கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. நோயாளிகளின் சௌகரியத்திற்காக நவீன ரக மருத்துவப் படுக்கைகள் அமைக்கப்பட்டு அனைத்திலும் I.V. ஸ்டாண்டு பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல, இங்கு 70 சதவீதம் படுக்கைகள் குழாய் வழி ஆக்சிஜன் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அதிக கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்சிஜன் டேங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களும் அவசர தேவைக்கு கையிருப்பில் உள்ளன. இந்த மருத்துவமனையை மேலும் விரிவுபடுத்தி படுக்கை வசதிகளை அதிகரிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு நல்ல சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்குவதற்காக பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் மருத்துவக்குழுவின் ஆலோசனைப்படி உணவு வகைகளைப் பட்டியலிட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு போன்ற வசதிகளும் உள்ளன.
சி.ஆர்.ஐ. அறக்கட்டளை மருத்துவமனை மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் செயல்பட உள்ளது. அரசின் கொரோனாவை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளுக்கு இந்த மருத்துவமனை உறுதுணையாக அமையும். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ. 3 கோடி. மருத்துவமனை குறித்த திட்டத்தை சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் சார்பில் கடந்த 20.05.2021 அன்று முதலமைச்சர் கோவை வந்திருந்த போது சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் துவக்க விழாவில் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஆர். நடராஜன், கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி. ஆர். ஜி. அருண்குமார், கோவை மாவட்ட வருவாய் துறை அலுவலர் ராமதுரை முருகன், கோவை கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நா. கார்த்திக் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
சி.ஆர்.ஐ நிறுவனம் ஏற்கனவே சமூக நலனுக்காக பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுடன் இணைந்து பல அரசு பள்ளிகளை தத்தெடுப்பது, விவசாய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சிறந்த விவசாயிகளுக்கு வேளாண்மைச் செம்மல் விருது வழங்குதல்,மேலும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவையையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.