கோவை: கொரோனா குறித்த சந்தேகங்கள் மற்றும் மருத்துவ உதவிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கொரோனோ உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
இதனிடையே, பொள்ளாச்சி பகுதியில் நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனா குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடையே குறைந்துள்ளது. லேசான அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இதனை போக்கும் விதமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 94887 88090 என்ற ஹெல்ப் லைன் எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு கொரோனா குறித்த சந்தேகங்களையும் ஆலோசனையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல, லேசான அறிகுறி உள்ளவர்கள் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டிய வழிமுறைகள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளவர்களின் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளவும், மேலும் நோய் அறிகுறி உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகள், அரசு மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள படுக்கைகளின் விவரங்கள் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு, இதற்காக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று இந்த மையத்தை பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் மருத்துவர் வரதராஜன் தொடங்கி வைத்தார். இதில் அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.