கோவை: பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வடுகபாளையம், காமாட்சி நகர் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

வடுகபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றுவரும் தடுப்பூசி போடும் பணியை முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமன் ஆய்வு செய்தார்.

அப்போது, அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி விரைவில் போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனாவிற்கு வேலி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரகுபதி, மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா, மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம் மற்றும் முருகன், கிட்டான் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.