கோவை: கோவையில் இருந்து - ஷார்ஜாவுக்கு மே மாதத்தில் 70 டன் காய்கறி, ஸ்னாக்ஸ், ஆயில், மற்றும் பூக்கள் கொண்டு செல்லப்பட்டன.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சில வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்படுகின்றன.
இது தவிர உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் 'ஏர் இந்தியா' சார்பில் இயக்கப்படுகின்றன.
இதனிடையே, கோவை சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமாக சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஷார்ஜாவுக்கு விமானங்கள் இயக்கப்படும். கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தற்பொழுது 'ஏர் அரேபியா' நிறுவனம் மட்டுமே கோவை - ஷார்ஜா இடையே விமான சர்வீஸ் வழங்கி வருகிறது.
மே மாதத்தில் இன்று வரை மொத்தம் 70 டன் எடையிலான பொருட்கள் கோவையில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இது குறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறியதாவது, "ஏர் அரேபியா நிறுவனம் இந்த மாதம் துவக்கத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் சர்வீஸ் வழங்கி வந்தது. பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் அடிக்கடி ஒரு விமான சர்வீஸ் ரத்து செய்யப்பட்டது.
இதனால் கடந்த இரு வாரங்களாக ஒரு விமானம் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் இதுவரை 70 டன் எடையிலான பொருட்கள் ஏற்றி செல்லப்பட்டுள்ளன. பெரும்பாலும் காய்கறிகள், ஸ்னாக்ஸ் உணவு வகைகள், ஆயில் மற்றும் பூக்கள் மட்டுமே அதிகம் புக்கிங் செய்யப்பட்டன.
ஷார்ஜாவில் இருந்து மட்டுமே பயணிகள் கோவை வரமுடியும். கோவையில் இருந்து மீண்டும் ஷார்ஜாவுக்கு செல்லும் விமானத்தில் பயணிகள் செல்ல அனுமதி இல்லை. இதனால் இந்த விமானம் திரும்பி செல்லும் பொழுது ஒவ்வொரு முறையும் 7 முதல் 8 டன் எடையிலான கார்கோ ஏற்றிச் செல்லப்பட்டது.
பயணிகள் இருந்தால் அதிகபட்சமாக 3 அல்லது மூன்றரை டன் கார்கோ மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.