கோவை: கோவை கிணத்துக்கடவில் இன்று 61 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கிணத்துக்கடவு பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு பகுதியில் 61 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிணத்துக்கடவு பகுதியில் இன்று 206 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், சொலவம்பாளையம், வடசித்தூர் பகுதியில் நடந்த காய்ச்சல் பரிசோதனை முகாமில் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், அறிகுறிகள் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.