திருப்பூரில் கொரோனா தடுப்பூசி செலுத்த வந்த தன்னார்வலர்கள் அலைக்கழிப்பு - மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம்..!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த தன்னார்வலர்கள் அலைக்கழிக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த தன்னார்வலர்கள், அலைக்கழிக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் தொற்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிப்பது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே, அவர்களுக்கு, இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, வரவழைக்கப்பட்டிருந்த நிலையில், எப்போது தடுப்பூசி செலுத்தப்படும் என நேரம் குறிப்பிட்டுச் சொல்லாமல் அலைக்கழிக்கப்படுவதாகத் தன்னார்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, முறையான பதில் தராமல் தரக்குறைவாக நடத்துவதாகச் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, மாநகராட்சி ஆணையர் சிவகுமாரை சந்தித்து முறையிடப் போவதாக கூறி தன்னார்வலர்கள் கலைந்து சென்றனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...