கோவை: கோவிட்-19 இரண்டாம் அலையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கோவை தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கோவை: கோவிட்-19 இரண்டாம் அலையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கோவை தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கோவிட்-19 நோய் இரண்டாம் அலையின் தாக்கமும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலகங்கள் மீது பொது முடக்கம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளும்.
கடந்த 2020-ம் ஆண்டில், கோவிட்-19 நோய் தொடர்பான சிக்கல் எழுந்த போது, அரசாங்கத்தின் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின் படி இந்திய ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பல சீரமைப்பு திட்டங்களை தொழில்துறைக்கு அறிவித்தது. அதன் விளைவாக அனைத்து முன்னணி பொதுத்துறை வங்கிகளும், தொழில்துறைக்கு குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தன.
கடந்த ஆண்டு அவசரகாலகடன் உத்தரவாத திட்டத்தில் அறிவித்த ஓராண்டு கடன் விடுப்பு காலம் பெரும்பாலான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிக்கலைக் கடந்து, நிலை பெற மிகவும் உதவியாக இருந்தது. பொது முடக்கத்தின் போது அறிவிக்கப்பட்ட வட்டித் தொகை கட்டுவதற்கான 6 மாத கால விடுப்பு காலம், சிறு தொழில் புரிவோர், தொழில்முனைவோர், வணிகர், தனி நபர் என்று அனைவருக்கும் உதவிகரமாக இருந்தது.
அந்த வகையில், பொது முடக்கத்துக்குப்பிறகு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட 70% வரையிலான மூலப் பொருட்களின் விலை உயர்வு. இதனால் சிறு தொழில் முனைவோரின் கையில் இருந்த மூலதனம் தீரும் நிலை உருவாகி மீண்டும் தொய்வு ஏற்பட்டன.
இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 இரண்டாம் அலையால் அனைத்து துறைகளும் குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, நாங்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு, குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் காங்வார், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஹவர்தன், தமிழக முதல்வர்க்ஊ மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மாண்புமிகு மத்திய நிதி அமைச்சருக்கு
வட்டி கட்டுவதற்கான ஆறு மாத கடன் விடுப்புக்காலம் 31, மார்ச், 2021 அன்றுடன் முடிவடைவதால், அனைத்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன.
அசல் தொகையைத் திரும்ப செலுத்துவதற்கான காலம் ஜூன் 2021அன்று தொடங்குகிறது. ஏற்கனவே வட்டித் தொகை கட்டுவது, மூலப்பொருள் விலை உயர்வு என்று பாதிக்கப்பட்ட நிலையில், வங்கிகள் நிர்ணயித்துள்ள கெடு தேதிக்குள் தொகையை கட்டுவதென்பது இயலாத செயல். இந்த சிக்கலை எதிர்கொள்ள முடியாமல், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 80%க்கும் அதிகமானவை NPA என அறிவிக்கப்பட்டு, தொழிற்சாலைகளை மூடுகின்ற நிலைக்கு தள்ளப்படும்.
எனவே, கடன் மற்றும் வட்டித் தொகையை கட்டுவதற்கான விடுப்புக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து 30, ஜூன் 2022 வரை நீடிக்க வேண்டும்.
இந்த பொருளாதார சிக்கலில் இருந்து மீளும் வகையில் பொதுத்துறை வங்கிகள், வங்கி சாரா 20% புதிய கடனுதவியை, தொழிற்சாலைகளின் நிலைக்கேற்ப வழங்க வேண்டும்.
ஓராண்டு காலத்துக்கு, 31.03.2022 வரை நிதிக்கடன் வசதி உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கு வட்டி தொகை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பொதுமுடக்க காலத்தில் ஏற்படும் தொழில் நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலகங்களுக்கு கோவிட் கால ஊக்கத் திட்டம் ஒன்றை அளிக்க வேண்டும்.
கடுமையான சிக்கல் மிகுந்த நிலையை கருத்தில் கொண்டு NPA நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளித்து. 31.03.2022 வரை நடவடிக்கைகளை ஒத்திப் போடவேண்டும்.
அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலகங்களுக்கு வர வேண்டிய தொகைகளை உடனடியாக அளிக்க வேண்டும்.
தேவையையும், நுகர்வையும் உருவாக்கும் வகையில் ஜிஎஸ்டி வரிவிகீதத்தை 10%, 15% என்று இரு நிலைகளாக திருத்த வேண்டும்.
நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி தொகைகளை போர்க்கால அடிப்படையில் திருப்பி அளிக்க வேண்டும்.
வட்டி மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகளில் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
ஆக்சிஜன் செறியூட்டி, முககவசம், கையுறை உள்ளிட்ட கோவிட்-19 நோய் எதிர்ப்பு உபகரணங்கள், கருவிகள் தயாரிப்புக்கு 2 ஆண்டு கால எஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும்.
தற்போது வழங்கப்படும் உயர்ந்த பட்ச கடனுதவித் தொகையான 25 கோடியை, 100 கோடியாக உயர்த்த வேண்டும்.
சிறு, குற மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சருக்கு
சிறப்புத்திட்டங்கள் மூலமாக தகுதியான நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடுவதற்கு விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலகங்களின் உற்பத்திப் பொருட்களை பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்புத்துறை மற்றும் ரயில்வே துறை 25% கட்டாயமாக வாங்குவதை ஒழுங்குபடுத்தும் விதத்தில் மத்திய அரசு ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும். அதனை 40% ஆக உயர்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் நவீனப் படுத்துதலில் ஈடுபட ஏதுவாக தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி தீட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு ஈடுபடும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டு Accelerator Depreciation வழங்க வேண்டும்.
சிறு தொழில் முனைவோருக்கு, கோவிட்-19 காரணமாக எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ள ஏதுவாக குறைந்த பிரிமிய தொகையில் சிறப்பு காப்பீட்டு திட்டம் அளிக்கப்பட வேண்டும்.
தொழிலாளர் துறை அமைச்சருக்கு
இந்த பொதுமுடக்க காலத்தில் வழங்கப்படும் ஊதியங்கள் மீதான ESI, PF தொகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
அச்சுறுத்தல் எதுவுமின்றி, சிறு தொழில் முனைவோர் வழங்கும் தன் உறுதி சான்றிதழ்கள் மதித்து ஏற்கப்பட வேண்டும்.
அந்தந்த தொழில் வளாகங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கும் வசதி ஏற்படுத்த மானியங்கள் வழங்கப்பட வேண்டும்.
கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய மாநில அரசுகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், இடம் பெயராமல் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
ESI-ல் உள்ள உபரிநிதி கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம்.
ராஜீவ் காந்தி ஸ்ரம் கல்யாண் திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு வேலையற்றோர் உதவித்தொகை வழங்க வேண்டும்.
ESI சட்டம்1948, பிரிவு 9-ன் கீழ், அடல் பீமித் விபக்தி கல்யாண் திட்டப்படி தொழிலாளர் நல உதவிகள் வழங்கலாம்.
சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சருக்கு
சிறப்பு திட்டங்கள் மூலமாக தகுதியுள்ள நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி போட உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகள் மற்றும் கோவிட் கவனிப்பு மையங்களுக்கும் மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கப்பட வேண்டும்.
தமிழக முதலமைச்சருக்கு
சிறப்பு திட்டங்கள் மூலமாக தகுதியுள்ள நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி போட உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
மின்கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, உரிம கட்டணம், மாசு கட்டுப்பாட்டு வாரிய கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.
உயர் மின் அழுத்த மின்சார நுகர்வோருக்கு விதிக்கப்படும் எம்.டி. கட்டணம் மற்றும் தாழ்வழுத்த மின்சார நுகர்வோருக்கு கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற மாநில நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன் தொகை வரும் 6 மாதங்களுக்கு மாற்றி அமைத்து பொது முடக்க காலத்தில் வட்டியும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், இடம் பெயராமல் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
பொதுமுடக்க காலத்தில் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பொது முடக்க காலத்தில் நஷ்டத்தால் தவிக்கும் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகை அளிக்க வேண்டும்.
இந்த பொதுமுடக்கம் விலக்கி கொள்ளப்படும்போது, பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்ப சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலகங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதை தங்களின் தலையீடு இந்த நேரத்தில் மிகவும் தேவை என்பதை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.