கோவை: கொரோனா எங்களையும் விட்டு வைக்கல்லப்பா. மீண்டு வந்த கதை பெருங்கதை. இப்ப கிட்டத்தட்ட 35 நாள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னமும் பயத்தோடுதான். இவன்தான் பாடாப்படுத்தறான். நல்லா சாப்பிடுப்பா இனி உள்ள காலத்துக்கு உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி தான் முக்கியம்.
கோவை: கொரோனா எங்களையும் விட்டு வைக்கல்லப்பா. மீண்டு வந்த கதை பெருங்கதை. இப்ப கிட்டத்தட்ட 35 நாள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னமும் பயத்தோடுதான். இவன்தான் பாடாப்படுத்தறான். நல்லா சாப்பிடுப்பா இனி உள்ள காலத்துக்கு உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி தான் முக்கியம்.
பணம், காசு அப்புறம் னு (பணம் காசும் முக்கியமுங்க) சொல்லி சொல்லி ஊட்ட வேண்டியதா இருக்கு. முதல்ல இவன் அப்பாவுக்கு வந்தது. பேஜாராயிட்டேன் ஏன்னா இவருக்கு இதய அறுவை சிகிச்சை பண்ணி 5 வருஷம்தான் ஆகுது. கடவுளேனு நினைச்சிட்டு 6 மணி நேரத்திற்கு ஒரு பாரசிட்டமால் போட்டேன். காய்ச்சல் 104.. அவர்கிட்ட தெர்மா மீட்டரை காட்ட மாட்டேன். மாமியாரிடம் சொல்லல்ல. தெரிஞ்சா ஐயோ குய்யோனு களே பாரம் தான்.
அப்படியே இரண்டாம் நாள் அதே மாதிரிதான் இப்ப கூட அசித்ரோமைசின். மூன்றாம் நாள் கொஞ்சம் சளி நன்றாக தெரிந்தது. போடு பல்மோக்ளியர் + க்ரோசின். அப்படியே நான்காம் நாள் காலை, எனக்கு காலைல வாசல் தெளித்து கோலம்போட்டு டிக்காக்ஷன் பால் காச்சி அவருக்கு காப்பி டிபன் குடுத்துட்டு படுத்தவ தான் சுரமா சுரம் ஐயோ. முடியல்ல. மதியம் சமைக்கணுமே மாமியார் காதில் விஷயத்தை போட்டார். வெளியே சமையலுக்கு ஏற்பாடு பண்ணிட்டார்.
மகன் என் அருகிலேயே நாள் முழுவதும் குழந்தை பாவமா படுத்துக்கிட்டான். அவனுக்கு அம்மா முடியாம படுத்துட்டா சோகமாகிடுவான். காரணம் நான் நோய்வாய்ப்பட்டதே ரொம்ப அரிது. சரி அப்புறம் நானும் அதே க்ரோசின் தான். எனக்கு சளி இல்லை. ஆனால் லேசா நெஞ்சுவலி இருந்தது. (மைல்ட் அட்டாக்கும் வந்திருக்க வாய்ப்புள்ளது) மூச்சு முட்டல் மிக மிக குறைவாக இரவில் மட்டும் .(உயரமாக ஒரு பீன் மோடா இருக்கு அதன்மேல் குப்புற படுத்துக்கிட்டேன்). அமிர்தாஞ்சன் ஸ்ட்ராங் எடுத்து நல்லா டீப் இன்ஹேல் பண்ணுவேன். உடனே நல்ல ஆசுவாசம் கிடைக்கும். அப்புறம் நமக்கு லீவு 2 நாள்தான் 3ஆம் நாள் எனது பேவரேட் பச்சத்தண்ணி குளியல்.
பின் காரிடார்ல வேப்பமரக் காற்றை நன்றாக உள்ளிழுத்தபடி அரைமணி நேர நடை. அம்புட்டுதான் நான் ரெடி. அதனால என் நாத்தனார் வேண்டாம் நீங்க பத்து நாள் ரெஸ்ட் எடுங்கனு சொல்லி சமைத்து, மாவு போட்டு அனுப்பி குடுப்பாங்க. (டன்சோ உபயம்). அடுத்த நாள் விடிகாலை திடீர்னு புள்ளையாண்டானை தொட்டுப்பார்த்தா கொதிக்குது. கடவுளேனு நினைச்சிட்டு எழுப்பி அதே க்ரோசின் போட்டுவிட்டேன். அவன் அப்பவும் எனக்கு ஒண்ணுமில்லம்மா என்றான். உன் கை சில்லுணு இருக்கு என்றான். அப்படியே சைலன்ட்டா குழந்தை படுத்துகிச்சு. அதே ஆறுமணிநேர இடைவெளியில் மாத்திரை. இவனுக்கும் இருமல் இருந்ததால் கோரக்ஸ் மற்றும் பல்மோக்ளியர். அசித்ரோமைசினும்.
இதற்கிடையில் மாமியாருக்கும் தொற்றிடுமோனு பயந்து ரூமை விட்டு நான் வெளியே வருவதே இல்லை அவங்க ஹாலில் இருந்ததால். அப்புறம் அவங்களும் மாஸ்க் போட்டுகிட்டாங்க நாங்க அங்க இங்கனு நடப்பதால் 3 நாள்தான் மகனும் சரியாகி விட்டான். ஆனால் ஒரு பட வாய்ப்பை இழந்துவிட்டான். ஆடிஷன் வரச்சொன்ன குறிப்பிட்ட நாளில் தான் அவனுக்கு காய்ச்சல். ( சங்கடப்பட்டோம்).
சரி என்னன்ன சாப்டோம்னு சொல்றேன். நல்லா 3 வேளை சாப்பிட்டோம். காய்கறி மற்றும் சூப், பன்னீர், கடலை ஏதாவது. அப்புறம் எனது சுக்கு கஷாயம். மாலையில் மாமியாரும் அவங்க பங்குக்கு வெத்திலை, வேப்பிலை, இஞ்சி, மஞ்சள், துளசி னு போட்டு கொதிக்கவைத்து குடிக்க குடுத்தாங்க. மகனுக்கு தினம் இருவேளை யூக்காலிப்டஸ் ஆயில் மார்பு மற்றும் முதுகில் நல்லா தேய்த்தபின் கையை அவன் மூக்கில் காட்டி டீப்பா முகரச் சொன்னேன். நல்ல பலன். குழந்தையில் இருந்தே இதை செய்வேன். நல்ல பலன் உண்டு. அப்புறம் கணவருக்கு ஆவி பிடிக்க வைப்பேன். கற்பூரவல்லி, துளசி, நொச்சி இலையுடன் கார்வால் போட்டு ஆவிபிடித்தால் கர கர கரனு சளி இறங்கும். நல்ல ரிலிப். இன்று வரை கஷாயங்கள் மற்றும் ஆவி பிடித்தல் தொடர்கிறது.
அப்புறம் கணவர் தினம் கல் உப்பு போட்டு கொப்பளிப்பார். காரணம் அவர்தான் குடும்பத்தலைவர். குடும்பம் காக்க பாவம் வேலைக்குச் செல்வதால் தொற்று தொற்ற அதிக வாய்ப்பு. மாஸ்க் போட தவறமாட்டோம். முக்கியமான விஷயம் சமையலில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகு அதிகமாக சேர்ப்பேன். சேர்க்காத நாளில்லை. எலுமிச்சை சாறு உப்பும் சர்க்கரையும் கலந்து நானும் மகனும் குடிப்போம். கணவருக்கு தருவதில்லை. (பயம்) முக்கியமான மற்றொன்று மகனுக்கு தினம் பாலில் தேன். கணவருக்கு வெறுமனே தேன் டீஸ்பூண் அளவு. (நல்ல பலன்) (எங்க ஊர் தேன்).
ஒருமாதம் கடந்தாயிற்று. கடந்த வருடம் மகனுக்கு மட்டும் வந்தது. இந்த வருடம் எங்க மூன்று பேருக்கு மட்டும். என் மாமியார் 74 வயது அவங்களை பார்க்க பாவமா இருக்கும். என்ன செய்யணும்னு தெரியாமல் பயத்தில் இறந்து போன என் மாமனார் படத்தை பார்த்து எல்லாரையும் காப்பாத்துப்பாணு வேண்டுவது மட்டுமே. இதுவரை அவரும் நலமே. சில சில சிம்டம்ஸ் அவரிடம் தெரிந்தது. (இதயம் மற்றும் சர்க்கரை நோயாளி அவர்) ஆனாலும் உழைத்து உழைத்து உரமேறிய உடம்பு. (வில்பவர் அதிகம்).
பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மற்றும் இரத்த அழுத்தத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் அனைவரும் சோதித்துக் கொள்வோம். (வீட்டில் வாங்கி வச்சாச்சு) எல்லா நட்புகளும் கவனமாக பத்திரமாக இருங்க.
இவ்வாறு அந்தத் தாய் தாங்கள் கடந்து வந்த பாதையை பதிவு செய்துள்ளார்.