கோவை: வால்பாறை நகராட்சி மூலம் கடைகள் தோறும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை 218 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல, வருவாய்த்துறை காவல் துறையின் சார்பில் வால்பாறை நகரை சுற்றிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் நகரில் உள்ள கடைகள் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் போன்ற பகுதிகளில் நவீன இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
தொடர்ந்து, நகராட்சி சுகாதாரத்துறையினர் வாகனங்கள் மூலம் தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.