கோவை: வால்பாறை அரசு கல்லூரியில் கொரோனா சிகிச்சை நல மையம் தொடங்கப்பட்டுள்ளது. இச் சிகிச்சை மையத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், வால்பாறை அரசு கல்லூரியில் கொரோனா சிகிச்சை நல மையம் தொடங்கப்பட்டுள்ளது. இச்சிகிச்சை மையத்திற்கு பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கட்டில், மெத்தை போன்ற பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், முகக் கவசம், பாதுகாப்பு உடைகள், கையுறை, கை கழுவும் திரவம் ஆகியவற்றை வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆனைமலை புலிகள் காப்பக தலைமையிடத்து உதவி வனப்பாதுகாவலர் பிரசாந்த், உதவி வனப்பாதுகாவலர் செல்வம் வால்பாறை வட்டாட்சியர் ராஜாவிடம் வழங்கினர் இந்நிகழ்வில் வனச்சரகர்கள் ஜெயச்சந்திரன், மணிகண்டன், வருவாய்த்துறை வனத்துறை ஊழியர்கள் பங்குபெற்றனர்.