கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நகராட்சி ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்த காரணத்தினால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வால்பாறை நகராட்சிக்கு புதிய ஆணையாளர் பணியமர்த்தப்பட்டார். அவருக்கு திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். தற்போது வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. சுமார் 200 பேர் பாதிப்படைந்துள்ளனர். நகராட்சி ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்த காரணத்தினால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், வால்பாறை திமுக சார்பில் உடனடியாக வால்பாறை நகராட்சிக்கு ஆணையரை நியமிக்க கோரி அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் பொறுப்பு ஆணையராக இருந்த சுரேஷ், இன்று வால்பாறை நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை வால்பாறை நகர கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி தலைமையில் நகராட்சியின் புதிய ஆணையாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை அளித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். இந்நிகழ்வில், JBR பாஸ்கர், ஈ.கா.பொன்னுசாமி, அம்பிகை சுப்பையா, கவுன்சிலர் செல்வம், சத்தியமூர்த்தி, டென்சிங் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.