பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுத்து பாதுகாக்கும் நோக்கோடு, பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளில் சிறப்பு முகாம் அமைத்து 20,000 தடுப்பூசிகள் போடும் பணி நாளை முதல் தொடங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி தனியார் மண்டபத்தில் வியாபாரிகள், தன்னார்வலர்கள், தொழில் வர்த்தக சபை, உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலை நிறுவன உரிமையாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள், மருத்துவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி அத்தியாவசிய பொருட்கள் சென்றடைய வியாபாரிகள் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் வீடுகளுக்கே பொருட்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் வியாபார நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, ‘‘தமிழகத்தில் கொரோனா இல்லாத நாள்தான் மகிழ்ச்சியான நாள் என முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து கொரோனாவை நீக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் வசிக்கும் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நாள் ஒன்றுக்கு 5 வார்டுகள் தேர்வு செய்து சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 20,000 பேருக்கு ஒரு வார காலத்திற்குள் தடுப்பு ஊசி செலுத்தப்படும்.
இந்த முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள், வென்டிலேட்டர் வசதி இல்லாத நிலை உள்ளதால், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் நிதி வழங்கி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் செய்யப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.