நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொரோனா நோய் கட்டுப்பாடு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன.

இந்தநிலையில், குன்னுார் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட அம்பேத்கர் நகர், MGR நகர், டானிங்டன், காந்திபுரம், ஒட்டுப்பட்டறை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அப்பகுதிகளில் என்ன பணிகள் நடைபெறுகிறது என்று அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இதில் குன்னுார் சார் ஆட்சியர் ரஞ்சித்சிங், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாலமுருகன், குன்னூர் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.