கோவை மாவட்டத்திற்கு கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.. முதலமைச்சருக்கு CPIM மாநிலச் செயலாளர் கடிதம்..!

கோவை: தமிழகத்திலேயே கொரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதி - ஆக்சிஜன் வசதி மற்றும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.


கோவை: தமிழகத்திலேயே கொரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதி - ஆக்சிஜன் வசதி மற்றும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தை மோசமாக பாதித்துள்ளது. இருப்பினும், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் படிப்படியாக சற்று நோய்த்தொற்று குறைந்து வருவது ஆறுதலை அளிக்கிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து மாநிலத்திலேயே அம்மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. நேற்றைய அரசின் செய்திக்குறிப்பின்படி (26.5.2021) தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 4268 பேர். தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 35707 பேர். (வீடுகள் மற்றும் கேர் மையத்தில் தனிமைப்படுத்தவர்கள் உள்ளிட்டு).

கோவை மாநகரில் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை என இரண்டு அரசு மருத்துவமனைகள் உள்ளன. சில தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சைக்காக கோவை மாநகர மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். இந்தநிலையில், கோவை மாநகரில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கும், ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்தநிலையில், மரணங்களைத் தவிர்த்திட கோவை மாவட்டத்திற்கு ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்திட வேண்டும். மேலும், ஆக்சிஜனும் கோவை மாவட்டத்திற்கு அதிகமாக வழங்கிட வேண்டும்.

கொரோனா நோய்த் தொற்று அதிகமாக ஏற்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு விரைந்து ஏற்பாடு செய்தால், ஓரளவுக்கு தொற்று பரவாமல் தடுப்பதற்கும் பயன்படும்.

மாநில அரசு விரைந்து கொரோனா நோய்த்தொற்றில் முதல் இடத்தில் உள்ள கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்கிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...