கோவையில் பொதுமக்களின் சிரமங்களைப் போக்க வீடுதேடிச் சென்று காய்கறி தொகுப்பு வழங்க 920 வாகனங்களுக்கு அனுமதி

கோவை: தமிழகமெங்கும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோவையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் போக்கும் வகையில் காய்கறிகளைப் பெற வீடுதேடிச் சென்று காய்கறி தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



கோவை: தமிழகமெங்கும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோவையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் போக்கும் வகையில் காய்கறிகளைப் பெற வீடுதேடிச் சென்று காய்கறி தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

‘‘கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும்‌ தளர்வற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்‌ பொதுமக்களுக்கு ஏற்படும்‌ சிரமங்களை போக்கி, எளிய வகையில்‌ காய்கறிகள்‌ பெறப்படும்‌ வகையில்‌, மொத்த வியாபார அங்காடிகள்‌ மூலமாகவும்‌, வேளாண்மை விற்பனை மற்றும்‌ வேளாண்‌ வணிகத்துறை மூலமாகவும் காய்கறிகள்‌ பெறப்பட்டும்‌, மாநகராட்சியின்‌ 100 வார்டு பகுதிகளிலும்‌ உள்ள பொதுமக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ செயல்படுத்தப்படுகிறது. மாநகராட்சி மற்றும்‌ தோட்டக்கலைத்துறை இணைந்து செயல்படும்‌ நேர்வுகளில்‌, மாநகராட்சியால்‌ இலவசமாக வாகனங்கள்‌ ஏற்பாடு செய்யப்பட்டு, வீடுதேடிச்‌ சென்று காய்கறி தொகுப்பு வழங்கும்‌ திட்டத்தினை 24.05.2021 அன்று மாண்புமிகு உணவுத்துறை அமைச்சா்‌ மற்றும்‌ மாண்புமிகு வனத்துறை அமைச்சா்‌ ஆகியோரால்‌ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும்‌, சில்லறை வியாபாரிகளும்‌ மேற்படி வியாபாரத்தில்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌ மாநகராட்சியிடமிருந்து சுமார்‌ 920 வாகனங்களுக்கு உரிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேற்கண்ட பணிகள்‌ சிறப்பான முறையில்‌ நடைபெறுவதை கண்காணிப்பு செய்ய ஒவ்வொரு வார்டுகளுக்கும்‌ உரிய பொறுப்பு அலுவலா்களும்‌, மண்டலத்திற்கு ஓர் ஒருங்கிணைப்பு அலுவலரும்‌ நியமிக்கப்பட்டுள்ளார்கள்‌.

எனவே, பொதுமக்கள்‌ தங்களது பகுதிகளில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஏற்பாடு செய்யப்பட்டு, விநியோகம்‌ செய்யும்‌ காய்கறிகள்‌ கிடைக்கப்‌ பெறாமலிருந்தாலோ அல்லது அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ உடனே, சம்பந்தப்பட்ட வார்டு பொறுப்பு அலுவலர்கள்‌ மற்றும்‌ மண்டல ஒருங்கிணைப்பு அலுவலர்களை கைபேசி எண்கள்‌ மூலம்‌ தொடா்பு கொண்டு தங்களது புகாரினை தெரிவிக்கலாம்‌.



மேலும்‌, கோயம்புத்தார்‌ மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு உட்பட்ட பல்பொருள்‌ அங்காடி வாயிலாக தங்களது குடியிருப்புகளுக்கு நேரடியாக மளிகைப் பொருட்கள்‌ விநியோகம்‌ செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...