மதுக்கரை அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை நிறைவேற்றி கொடுத்தார் திமுகவின் குறிச்சி பிரபாகரன்..!

கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மதுக்கரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட குறிச்சி பிரபாகரன், மருத்துவமனைக்கு வேண்டிய கூடுதல் வசதிகளை நிறைவேற்றி தந்தார்.



கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மதுக்கரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட குறிச்சி பிரபாகரன், மருத்துவமனைக்கு வேண்டிய கூடுதல் வசதிகளை நிறைவேற்றி தந்தார்.

கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மதுக்கரை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த குறிச்சி பிரபாகரன், அங்கு கொரோனா சிகிச்சைக்கு வரும் தொகுதி மக்கள் பயன்பெறுவதற்கு தேவையான வசதிகள் குறித்து மருத்துவர் கண்ணன் மகாராஜ் உடன் ஆலோசித்தார். அங்கு படுக்கைகள் அதிகப்படுத்தவும் சென்ட்ரல் ஆக்சிஜன் சிஸ்டம், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மின் விசிறி, குளிக்க சுடு நீர் வசதி, குடிக்க சுடு நீர் வசதி ஆகிய தேவைகளைக் கேட்டறிந்தார்.

அதன்பிறகு, குறிச்சி பிரபாகரன் உடனடியாக மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை அமைச்சர் மூலமாக சென்ட்ரல் ஆக்சிஜன் வசதி செய்ய வற்புறுத்தினார். அதனைத் தொடர்ந்து உடனடியாக சென்ட்ரல் ஆக்சிஜன் வசதி தொடங்கப்பட்டது.



அத்துடன் தற்போது, கழக நண்பர்கள், ஆடிட்டர் இராஜேஸ், ஆடிட்டர் சுபாஷிணி, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் உறுப்பினர் எல்டெக்-செல் சதீஸ், கோவை ஜீ.டி. மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவர்கள் உதவியுடன் இன்று 12 மின் விசிறிகள், 20 மின் விளக்குகள், 5 ஜாக்குவார் வாட்டர் ஹீட்டர்கள் அனைத்தையும் மருத்துவர் கண்ணன் மகாராஜ் அவர்களிடம் இன்று குறிச்சி பிரபாகரன் வழங்கினார்.



இதுகுறித்து மருத்துவர் கண்ணன் மகாராஜ் கூறும்போது, ‘‘தேவைகள் அறிந்து எங்களை ஊக்குவித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த குறிச்சி பிரபாகரன் அவர்களுக்கும் சுகாதாரத் துறையினர், ஆட்சியாளர், நல்லுள்ளம் கொண்டு உதவிய அனைவருக்கும் மருத்துவக் குழு சார்பாகவும் பயனடைந்து வரும் மக்கள் சார்பாகவும் நன்றி'' என்று தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் தி.மு.க கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...