கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். முன்கள பணியாளர்களாக கருதப்படும் தூய்மைப் பணியாளர்கள் நாள்தோறும் நகர்ப்பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே, மக்கள் மத்தியில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழலில் முன் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள் நோய் தொற்றிற்கு ஆளாவதைத் தடுக்கும் விதமாக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு இன்று பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பலவகையான மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

பின்னர், பொள்ளாச்சி நகராட்சி சார்பில் பயிற்சியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் மற்றும் யோகா பயிற்சி செய்வது குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.