திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் வீடு தேடிச் சென்று அரிசி உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கி வரும் பெண்மணி..!

திருப்பூர்: திருப்பூரில் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மாற்றுத்திறனாளிகள் வீடு தேடிச் சென்று அரிசி உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கி வருகிறார்.


திருப்பூர்: திருப்பூரில் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மாற்றுத்திறனாளிகள் வீடு தேடிச் சென்று அரிசி உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கி வருகிறார்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் வகையில் திருப்பூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவன தலைவர் இந்திரா சுந்தரம் தலைமையில் சமூக ஆர்வலர்கள் முத்துசரவணவேல், திவாகர், கார்த்திக் உள்ளிட்ட தன்னார்வலர்கள் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கு நல உதவி பொருட்களை வழங்கி வருகின்றனர்.



மாற்றுத்திறனாளிகள் வெங்கடாசலம், சண்முகம், சிவகுமார், குமார் உள்ளிட்டோரின் உதவியுடன் மாவட்டம் முழுவதும் ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களுக்கு உதவும் வகையில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று 5 கிலோ அரிசி உள்ளிட்ட பல உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.



இதுவரை 500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தவிர திருப்பூர், தாராபுரம், காங்கயம், பல்லடம், மங்கலம் கொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த அறக்கட்டளை சார்பில் காவல்துறையினருக்கும் உணவு மற்றும் ஸ்னாக்ஸ் நியமனம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பொதுமக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் வரை தங்களது பணி தொடரும் என அறக்கட்டளை தலைவர் இந்திரா சுந்தரம் தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...