கோவை: கோவை மாவட்டத்தில் இரண்டாவது தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி 84 மையங்களில் போடப்பட்டது.
கோவை: கோவை மாவட்டத்தில் இரண்டாவது தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி 84 மையங்களில் போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கோவை மாவட்டத்திற்கு வரக்கூடிய தடுப்பூசிகள் இரண்டாம் தவணை செலுத்த வரும் முதியோருக்கு போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் 18 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கோவை வந்தது. அந்த தடுப்பூசிகளை 45 வயதிற்கு மேலானவர்களுக்கு இரண்டாம் தவணை செலுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதில் 14,200 தடுப்பூசிகள் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 84 மையங்களில் கடந்த 81 நாட்களுக்கு முன் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் இரண்டு தவணையாக செலுத்தப்பட்டது.
இதற்காக பெரும்பாலான மையங்களுக்கு தலா 200 தடுப்பூசிகளும் பிரதான மையங்களுக்கு 500 தடுப்பூசிகளும் அனுப்பப்பட்டது. அந்தந்த மையங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.