கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு மதியம் இரண்டு மணிக்கு மேல் விடுப்பு அளிக்க அமைச்சரிடம் கோழி கடை கணேசன் மனு அளித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் அவர்களிடம் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தமாக ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் முன்னாள் நகரமன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில், கொரோனா காலகட்டத்தில் நோய்த் தொற்று அதிகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு பக்ச் சுமையைக் குறைக்க, வேலை நேரத்தை குறைக்க வேண்டும். மேலும், வால்பாறை மேல் பகுதியில் 14 ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளன. அவற்றில் 2535 பேர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழும் கிராமங்களுக்கு குடி நீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, வீடு கட்டி கொடுக்கும் திட்டம் போன்றவைகளை அமைத்துத் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.