வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம்... அச்சத்தில் மக்கள்..!

கோவை: கோவை வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் குடியிருப்புப் பகுதியில் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: கோவை வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் குடியிருப்புப் பகுதியில் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சிறுத்தைகள் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் இரவு நேரங்களில் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சிறுத்தைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளில் வளர்க்கும் நாய், கோழி, பூனை, ஆடு போன்றவற்றை வேட்டையாடித் தின்று வருகிறது. தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக, தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்துப் பகுதியும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.



இதனால் வால்பாறை பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வால்பாறை போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ள நகைக் கடை வீதி, குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று தினமும் இரவு நேரங்களில் சுற்றித் திரிவதை அப்பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில் வீட்டுக்கு முன்பு நாயைக் கொன்று பிடித்து வீட்டின் வெளியே இழுத்துச் செல்லும் காட்சியும் சிறுத்தை பிரதான சாலையில் நடந்து செல்லும் காட்சியும் பதிவாகி உள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால், அதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...