கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு, கோவை மாவட்டம் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறியிருப்பதாவது:
மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று வேளாண் திட்டங்களை திரும்ப பெற கோரி தலைநகர் டெல்லியில் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அந்த மூன்று சட்டங்களை திரும்ப பெற கோரியும் நாடு முழுவதும் இன்று மத்திய அரசை கண்டித்து அனைத்து விவசாயிகளின் வீடு, தோட்டங்களில் கருப்பு கொடி கட்டி தனிமனித இடைவெளியுடன் கண்டன முழக்கமிட்டனர்.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, சுல்தான்பேட்டை, சூலூர், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் என ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.