கோவை: கொரோனா பெருந்தொற்றின் பரவல் கோவையில் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா பாதிப்பில் மகன் இறந்ததைக் கேட்ட தாய் அதிர்ச்சியில் உயிரிழந்திருக்கிறார். இந்த சோகம் அப்பகுதியினரை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 48 வயது தொழிலாளி, இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவரது 70 வயது தாயாரை அவர் தனது வீட்டில் வைத்து பாசத்துடன் கவனித்து வந்தார். 70 வயது தாயும் தனது ஒரே மகன் மீது அளவுகடந்த அன்புடன் இருந்து வந்தார். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 48 வயது தொழிலாளிக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. உடனே, அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவருக்கு கொரோனா பெருந்தொற்று இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அன்று முதலே அவரது தாயார் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை நினைத்து மன வேதனையுடன் இருந்து வந்தார். சில நேரங்களில் மயங்கியும் விழுந்தார். அவரை குடும்பத்தினர் மகனுக்கு ஒன்றும் ஆகாது என சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் 48 வயது தொழிலாளி, திடீரென உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவர் இறந்த தகவல் அவரது தாயாருக்கு தெரிவிக்கப்பட்டது. அன்பும் பாசமும் வைத்திருந்த மகன் இறந்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் தட்டி எழுப்பி பார்த்தபோது, அவர் இறந்தது தெரியவந்தது. தனது அன்பு மகன் இறந்த செய்தியைக் கேட்டதும் தாயும் இருந்தது, அந்தப் பகுதியில் உள்ள மக்களை நெகிழச் செய்ததோடு சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.