கோவையில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது..!

கோவை: கோவையில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் மீது புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த வாலிபரைக் கைது செய்தனர்.


கோவை: கோவையில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் மீது புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த வாலிபரைக் கைது செய்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு முத்துமாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண், இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வெளியே யாரும் இல்லாததை அறிந்த வாலிபர் ஒருவர் பாத்ரூம் கதவின் இடுக்கு வழியாக அந்தப் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

அந்த இளம்பெண் நடந்தவற்றை தன் கணவரிடம் கூறி கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து அந்த இளம்பெண் சாய்பாபா காலனி போலீஸில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது அந்தப் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் 24, என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...