நீலகிரியில் கை கழுவுவதற்கு கிருமிநாசினிக்கு பதில் பூசணிக்காய்... பழங்குடி இன மக்களின் கண்டுபிடிப்பு..!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியின கிராம மக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கை கழுவுவதற்கு சோப்பு கிருமிநாசினிக்கு பதிலாக பூசணிக்காய் என்ற பொருளை பயன்படுத்தி வருகின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியின கிராம மக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கை கழுவுவதற்கு சோப்பு கிருமிநாசினிக்கு பதிலாக பூசணிக்காய் என்ற பொருளை பயன்படுத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ளது புதுகிராமம். இந்தக் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். தற்போது கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கிருமிநாசினிக்கு பதிலாக வனப்பகுதிகளில் கிடைக்கும் அரிய வகை பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரத்தில் கிடைக்கும் பூசணி காய்களை சேகரித்து அவற்றை வெயிலில் உலர்த்திப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பரவிவரும் கொரோனா காலத்தில் அடிக்கடி கை கழுவுவதற்கு சோப்புக்கு பதிலாக பூசணி காய்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தப் பூசணிக்காயை தாங்கள் மட்டும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமவெளிப் பகுதியில் உள்ள தனியார் சோப்பு நிறுவனத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

தற்போது பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை காலம் என்பதால் பழங்குடியின மாணவர்கள் தங்கள் பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கும் நோக்கில் இப்பொருட்களை சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் கூறுகையில், ‘‘வனங்களில் கிடைக்கும் சோப்புக்காய் என்றழைக்கப்படும் பூசணிக்காயை நசுக்கினால் அதில் உள்ள வேதிப் பொருளை நுரைபோல் வெளிவரும் அது கிருமிகளை அழிக்கக் கூடியது சோப்பு நிறுவனங்களே இதை சோப்பு தயாரிப்புகளில் பயன்படுத்தி வருகின்றன'' என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...