கோவையில் முதியோர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறையினர்க்கு உதவி..!

கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், கோவையில் முதியோர்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்ற காவல் துறையினர்க்கு உதவிட காவல் ஆணையர் உத்தரவு.


கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், கோவையில் முதியோர்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்ற காவல் துறையினர்க்கு உதவிட காவல் ஆணையர் உத்தரவு.

கோவை மாநகர காவல்‌ நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்‌ காவல்‌ ஆணையர்‌ தீபக்‌ M.தாமோர்‌, இ.கா.ப., கொரோனா பெருந்தொற்று காலத்தில்‌ முதியோர்கள்‌ மற்றும்‌ ஓய்வுபெற்ற அனைத்து காவல்துறையினருக்கும் உதவிகள்‌ புரியும்‌ வகையில்‌ அவர்கள்‌ வசிக்கும்‌ வீடுகளை கண்டறிந்து தேவையான உதவி புரிய அனைத்து காவல்‌ நிலையங்களுக்கும்‌ உத்தரவு பிறப்பித்திருந்தார்‌. இவ்வாறு தெரிவிக்கப்பட்ட உத்தரவின்‌ பேரில்‌ 25.05.2021-ஆம்‌ தேதி கோவை மாநகரம்‌ குனியமுத்தூர்‌ காவல்‌ நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியில்‌ வசிக்கும்‌ ஓய்வு பெற்ற

கூடுதல்‌ துணை காவல்‌ ஆணையர்‌ சுந்தரராஜன்‌ வீட்டிற்கு குனியமுத்தூர்‌ காவல்‌ நிலைய காவலர்‌ ஒருவர்‌ சென்று,

மேற்கண்ட ஓய்வு பெற்ற கூடுதல்‌ துணைக்‌ காவல்‌ ஆணையர்‌ அவர்களது உடல்‌ நலம்‌ குறித்தும்‌ மற்றும்‌ இதர தேவைகள்‌ பற்றியும்‌ கேட்டறிந்தார்‌. மேலும்‌, அந்த காவலர்‌ எந்தத் தேவை என்றாலும்‌, காவல்‌ நிலையத்திலிருந்து உதவி செய்யத்‌ தயாராக இருப்பதாக கூறி தொலைபேசி எண்களைக் கொடுத்தும்‌, ஓய்வு பெற்ற கூடுதல்‌ துணைக்‌ காவல்‌ ஆணையர்‌ அவர்கஞடன்‌ சமூக இடைவெளி விட்டு புகைப்படம்‌ எருத்துக்‌ கொண்டார்‌. இவ்வாறு பணியில்‌ இருக்கும்‌ காவல்துறையினர்‌ முதியோர்கள்‌ மற்றும்‌ ஓய்வு பெற்ற காவல்துறையினர்கள்‌ மீது காட்டப்படும்‌ மனிதாபிமான செயல்பாட்டைக்‌ கண்டது தனக்கு இது முதல்‌ முறை என்று ஓய்வு பெற்ற கூடுதல்‌ துணைக்‌ காவல்‌ ஆணையர்‌ அவர்கள்‌ தெரிவித்தும்‌, மேற்கண்ட நிகழ்வை சமூக வலைதளங்களில்‌ பதிவிட்டு கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ அவர்களுக்கு வாழ்த்துகளையும்‌, பாராட்டுகளையும்‌ தொவித்துக்‌ கொள்வதாகவும்‌ மற்றும்‌ இறைவன்‌ அவருக்கு நீண்ட ஆயுளைக்‌ கொடுக்கட்டும்‌ என்றும்‌ மனதார தெரிவித்த பதிவு சமூக வலைத்தளங்களில்‌ பேசப்பட்டு வருகிறது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...