கிணத்துக்கடவில் கொரோனா சிகிச்சை மையம்... அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்..!

கோவை: கிணத்துக்கடவு அக்சயா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று சிகிச்சை மையத்தை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.


கோவை: கிணத்துக்கடவு அக்சயா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று சிகிச்சை மையத்தை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு வட்டாரப் பகுதியில் உள்ள அக்சயா பொறியியல் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமும், இதேபோல் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமும் தொடங்கப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு அக்சயா கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை இன்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.



மேலும், கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த அமைச்சர் குழுவினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கொரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் வலியுறுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...