பொள்ளாச்சி: தடுப்பூசி போடுவதற்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப் புள்ளிதிறந்ததும் மூன்று கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பூசி போடப்பட இருக்கிறது. பொள்ளாச்சியில் அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
ஆலோசனைக்குப் பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் இந்தக் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உள்ளாகி இருக்கிறது. தடுப்பூசியைப் பொறுத்த அளவில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கூட இந்தத் தடுப்பூசி போடுவதற்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறார். வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் தேதி அந்த ஒப்பந்தப் புள்ளி திறக்க இருக்கிறார்கள். மூன்று கோடியே 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இங்கே, மருத்துவ அதிகாரிகள் இன்னும் மக்கள் தடுப்பூசி போட வர தயங்குகிறார்கள் எனக்கூறினார்கள். மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி போடுவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் அறிவுரை கூறியுள்ளோம் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கிராம ஊராட்சி, பேரூராட்சி வார்டு, நகராட்சி வார்டுகளிலே ஒவ்வொரு பகுதியிலும் அந்தக் குழுக்கள் சென்று ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் என்ன பாதிப்புகளுக்கு உண்டாகியுள்ளனர் என்பதை கண்டறிவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்றார்.