கொரோனாவால் பாதிக்கப்பட்ட குன்னூர் பகுதி மக்களுக்கு காவல் துறையினர் மற்றும் விவேகம் நண்பர்கள் குழு நிவாரண உதவி..!

நீலகிரி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட குன்னூர் எம்ஜிஆர் நகர் பகுதி மக்களுக்கு காவல் துறையினர் மற்றும் விவேகம் நண்பர்கள் குழு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.


நீலகிரி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட குன்னூர் எம்ஜிஆர் நகர் பகுதி மக்களுக்கு காவல் துறையினர் மற்றும் விவேகம் நண்பர்கள் குழு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் டிடிகே சாலையில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் தினக் கூலிகளாக உள்ளனர். இப்பகுதியில் உள்ள சிலருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, இங்குள்ள 130 குடும்பங்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இங்குள்ள 130 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க நீலகிரி மாவட்ட காவல் துறை மற்றும் குன்னூர் வண்ணாரப்பேட்டை விவேகம் நண்பர்கள் குழு சார்பாக முடிவு செய்யப்பட்டு அதற்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.பாண்டியராஜன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு, அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குன்னூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ், காவல் ஆய்வாளர் பிருதிவிராஜ், உதவி ஆய்வாளர் நசீர் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...