கோவை: நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த மே-26ஆம் நாளை “இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாளாக” கடைப்பிடிக்க டெல்லியில் போராடி வரும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டுக் குழுவும் டெல்லியில் கூடிய மத்திய தொழிற்சங்கங்களும், தமிழக தொழிற்சங்கங்களும் முடிவெடுத்துள்ளன.
கோவை: நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த மே-26ஆம் நாளை “இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாளாக” கடைப்பிடிக்க டெல்லியில் போராடி வரும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டுக் குழுவும் டெல்லியில் கூடிய மத்திய தொழிற்சங்கங்களும், தமிழக தொழிற்சங்கங்களும் முடிவெடுத்துள்ளன.
அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக C.தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“கோவை மாவட்ட LPF-INTUC-AITUC-HMS-CITU-MLF-AICCTU-SDTU தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாவட்ட நிர்வாகிகள் ப.மணி (LPF), P.சண்முகம் (INTUC), C.தங்கவேல் (AITUC), க.வீராசாமி (HMS), S.கிருஷ்ணமூர்த்தி (CITU), மு.தியாகராசன் (MLF), R.தாமோதரன் (AICCTU), N.ரகுபுநிஸ்தார் (SDTU) ஆகியோர் கலந்துகொண்டு எடுத்த முடிவின்படி,
நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த மே-26ஆம் நாளை “இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாளாக” கடைப்பிடிக்க டெல்லியில் புதிய விவசாய சட்டங்களை நீக்கக் கோரி கடந்த ஆறு மாதகாலமாகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டுக் குழு தீர்மானித்துள்ளது. விவசாயிகளோடு இணைந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதென டெல்லியில் கூடிய மத்திய தொழிற்சங்கங்களும், தமிழக தொழிற்சங்கங்களும் முடிவெடுத்துள்ளன.
மேற்கண்ட முடிவினை கோவை மாவட்டத்திலும் நிறைவேற்றுவது என்று எடுத்த முடிவின்படி, கீழ்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் உள்ள அனைத்து தொழிற்சங்க அலுவலகங்களின் முன்பும், மேற்படி தொழிற்சங்கங்களை சார்ந்தவர்களின் வீடுகளின் முன்பும் “கறுப்புக் கொடி” ஏற்றி கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
கோரிக்கைகள்
மத்திய அரசே!
1. இந்தியர்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்! கோவை மாவட்டத்தில் அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் இலவச தடுப்பூசி போடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடு.
2. கொரோனாவால் வேலையிழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச உணவு தானியங்களோடு, மாதம் ஒன்றுக்கு ரூ.7,500/- வழங்குக!
3. போராடும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறு!
14. பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவான தொழிலாளர்களுக்கு எதிரான தொழிலாளர் சட்டத்தின் தொகுப்புகள் நான்கை திரும்பப் பெறு!
5. மின்சார சட்டத் திருத்தம், மோட்டார் வாகன சட்டத் திருத்தம் ஆகியவற்றை உடனே கைவிடு!
6. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்திடு!
7. கோவை மாவட்ட நிர்வாகமே, கோவை மாநகரின் 100 வார்டுகளிலும், கொரோனா தடுப்பூசி போடும் மையங்களை தீர்மானித்து தடுப்பூசி போடுவதை உடனே தொடங்கிடு! மாவட்டத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் தடுப்பூசி போடுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடு!
8. கொரோனா பரிசோதனை முடிவுகளில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்! காலதாமதத்தை போக்கிடு! கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்து!'' என்று குறிப்பிட்டுள்ளார்.