குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பலாப்பழம் சாப்பிட்ட காட்டு யானை கூட்டம் - வாகனத்தை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சம்!

கோவை: நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பலாப்பழம் சாப்பிட்ட காட்டு யானை கூட்டம் வாகனத்தை ஆக்ரோஷத்துடன் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பலாப்பழம் சாப்பிட்ட காட்டு யானை கூட்டம் வாகனத்தை ஆக்ரோஷத்துடன் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மலைப்பாதையில் வாகன போக்குவரத்து 80 சதவீதம் குறைந்துள்ளது.



அதேசமயம், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனம் மட்டும் சென்று வரும் நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே உள்ள மலைப்பாதையில் இரண்டு குட்டிகளுடன் காட்டுயானைகள் சாலையின் நடுவே நின்று பலாப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை பார்த்த காட்டு யானைகள் குட்டியுடன் வாகனத்தை விரட்டியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதைத் தொடர்ந்து சில மணி நேரம் அப்பகுதியில் நின்ற காட்டுயானை கூட்டம், மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

அப்பகுதியில் தற்போது பலாப்பழ சீசன் என்பதால் காட்டு யானைகள் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் முகாமிட்டு இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...