கோவையில் சேரன் மாநகர் சுற்றுப்புறப் பகுதிகளில் மாநகராட்சி நடமாடும் காய்கறி வாகனங்கள் வராததால் மக்கள் அவதி!

கோவை: கோவையில் சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மாநகராட்சி நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வாகனங்கள் வராததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.


கோவை: கோவையில் சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மாநகராட்சி நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வாகனங்கள் வராததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, மக்களின் நலன் கருதி காய்கறி மற்றும் பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட சேரன் மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பல ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. ஆனால், கடந்த மூன்று நாட்களாக நடமாடும் காய்கறி வாகனம் வரவில்லை. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை வாங்கி வைத்த காய்கறி மற்றும் பழங்களை கொண்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி ஒரு சில வணிகர்கள் சேரன் மாநகர் பகுதியில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனையை மறைமுகமாக நடத்தி வருகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சேரன் மாநகர் பகுதியில் ஆய்வு செய்து மக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் தினமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...