கோவை: கோவை உட்பட மேற்கு மாவட்டங்களில், கொரோனா பாதிப்பை தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை தொழில் நகரம் என்பதால், மற்ற மாவட்டங்களை விட பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மேற்கு மாவட்டங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. தற்போது, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மீது அதிகளவு கவனம் செலுத்தி வருகிறோம்.
மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலருடன் கூடுதல் அலுவலர்களை நியமிக்க, அரசு திட்டமிட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 30.5 சதவீதம் அளவுக்கு பாதிப்பு உள்ளது. கோவையில் ஆக்சிஜன் நெருக்கடி ஏற்படாமல் இருக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறையை சமாளிக்க, ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லது ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்படாது. நோய்த் தொற்று பரவலை தடுக்க, சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை, கோவையில் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.