கோவை: தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் செலுத்தவேண்டிய நிலுவை மின்கட்டணம் கோடிக்கணக்கில் பாக்கி உள்ளதாக அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது.

நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம்(CAPA) தலைவர் என்.ஆர்.ரவிசங்கர் நிலுவையில் உள்ள கோடிக்கணக்கான மின்கட்டணம் குறித்து கூறியதாவது, ‘‘எங்கள் சங்கம் சார்பில், 2020 நவம்பர் 9 அன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ‘TANGEDCO' 9 மண்டலங்களில் (சென்னை வடக்கு, சென்னை தெற்கு, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, வேலூர், திருச்சி, விழுப்புரம், ஈரோடு) 2015, ஜனவரி 1 முதல் 2020 அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு(TANGEDCO) செலுத்தவேண்டிய நிலுவை கட்டணம் குறித்த விவரங்களைக் கேட்டிருந்தோம்.

ஈரோடு மண்டலத்தைத் தவிர மீதமுள்ள 8 மண்டலங்களும் தகவலை அனுப்பி விட்டன. இதன்படி, தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி Rs.1127,87,34,655 கோடி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் செலுத்தவேண்டிய நிலுவை மின்கட்டணம் Rs.1700,95,89,531 கோடி என மொத்தம் மின் கட்டண பாக்கி Rs.2828,83,24,186 கோடி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிலுவை கட்டணங்களை விரைந்து வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.